Discover and read the best of Twitter Threads about #நாமக்கல்

Most recents (6)

*ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகள் ஆஞ்சநேய ஸ்வரூப லட்சணங்களைப்பற்றி வெகு அழகாகக் குறிப்பிடுகிறார்*.

அதாவது ''ஞானத்தின் உச்ச நிலை; பக்தியில் உச்ச நிலை; பலத்தில் உச்ச நிலை; வீரத்தில் உச்ச நிலை; கீர்த்தியில் உச்ச நிலை; சேவையில் உச்ச நிலை;

1
வினயத்தில் உச்ச நிலை'' இவையெல்லாம் சேர்ந்த ஒரே ஸ்வரூபம் ஆஞ்சநேயனே! என்கிறார்.

வாயுவின் அம்சத்தினால் அஞ்சனாதேவியிடம் அவதரித்தவர் ஆஞ்சநேயர். நித்திய பிரம்மச்சாரியான இவர் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்.

2
நற்குணங்களுக்கெல்லாம் இருப்பிடமான தன்னகரில்லா ராம பக்த அனுமானை வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டும்.

பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் ஆஞ்சநேயர்.

3
Read 100 tweets
#ஶ்ரீசம்மோஹனகிருஷ்ணன் இவரை பற்றி இன்று தான் எனக்கு தெரிய வந்தது. எப்படி அர்தநாரீஸ்வரர் பாதி சிவன் பாதி பார்வதியாக உள்ளாரோ அதே போல பாதி கிருஷ்ணன் பாதி ருக்மிணியாக சம்மோஹன கிருஷ்ணன் தரிசனம் தருகிறார். இவரை வழிபட்டால் குடும்ப வாழ்வில் கணவன் மனைவியிடையே இருக்கும் மனஸ்தாபங்கள் மறைந்து
குடும்பங்களில் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். மரீசி முனிவர் இவர் மேல் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இயற்றி நமக்கு அருளியுள்ளார். காலையில் நீராடிய பின் மூன்று முறையும் இரவில் உறங்கப் போகுமுன் ஒரு முறையும் சொல்வது அளவற்ற நன்மைகளை தரும்.
க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா
ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்
இஷீசாபம் வேணுவாத்தியம்ச தாரயந்தம் புஜாஷ்டகை:
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே
Read 18 tweets
#நரசிம்மர்_குடைவரை_கோவில்
இந்தியாவில் சிறந்து விளங்கும் குடவரைக் கோவில், மும்மூர்த்தி தலம் என்ற சிறப்பினை உடைய இத்திருக்கோவிலில் ஈருயிர் ஓர் உடலாக சங்கர நாராயணனாக, பரந்தாமன் காட்சி தரும் அழகிய திருக்கோலம் சைவ வைணவ பேதம் போக்குகிறது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம
அவதாரத்தை தரிசிக்க இயலாத மகாலட்சுமி பெருமாளிடத்தில் அவரின் நரசிம்ம அவதாரத்தை தான் தரிசிக்க ஒரு வழி கேட்டார். அதற்கு அவர், ஸ்ரீசைலம் எனும் ஷேத்ரத்தில் கமலாலய குளத்தில் அமர்ந்து அஷ்டக்ஷரமாகிய திருஎட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து அதன் பலனாக தன் நரசிம்ம கோலத்தை தரிசிப்பாய் என்றார்.
அதன்படி மகாலட்சுமி கமல மலர்கள் நிறைந்திருந்த கமல வனத்தினில் ‘கமலாலயம்’ என்னும் குளத்தில் நரசிம்ம மூர்த்தியை நினைத்து கடுந்தவம் புரிந்தாள்.
இந்த சமயத்தில் திரேதாயுகத்தில் ராமராவண யுத்தத்தில் மூர்ச்சையான லக்ஷ்மணனின் மயக்கத்தை தெளிய வைப்பதற்காக சஞ்சீவி பர்வதத்தை ஆஞ்சநேயர் எடுத்து
Read 14 tweets
#ஶ்ரீஆஞ்சநேயர்கோயில் #நாமக்கல் #ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர்திருக்கோவில்
கொடிய அரக்கன் இரணியன் தன் மகனை யானையின் காலடியில் கிடத்தியும், மலை மீதிலிருந்து உருட்டியும் கொல்ல முயன்றும், ஒவ்வொரு முறையும் பிரகலாதனை ஶ்ரீஹரி காப்பாற்றினார். ஶ்ரீஹரியை நம்பியவர்கள் என்றும் கைவிடப்பட மாட்டார்கள் Image
என்பதை வெளிப்படுத்தும் திருவவதாரம் ஶ்ரீநரஸிம்மர் என்னும் உக்ர ரூப அவதாரம். மற்ற அவதாரங்கள் யோசித்து, திட்டமிட்டு எடுக்கப்பட்ட அவதாரங்கள். ஆனால் நரஸிம்மாவதாரம் ஒரு நொடியில் எடுக்கப்பட்டது. ஶ்ரீமஹாலக்ஷ்மிக்கு கூட தெரிவிக்கும் முன் எடுக்கப்பட்ட அவதாரம். ஶ்ரீநரஸிம்மரின் உக்ரத்தை
கண்டோர் நடுங்கினர். அவரை சாந்தபடுத்த வேண்டும் இல்லையேல் உலகுக்கு என்ன நஷ்டம் வரும் என்று சொல்ல முடியாது என்பதால் எல்லோரும் குழந்தை பிரகலாதனை வேண்டினர். அவனும் ஶ்ரீஹரியிடம் உலக நலனுக்காக சாந்தமடைய பிராத்தனை செய்தான். அதே சமயம் ஶ்ரீஹரியின் இந்த ரூபத்தை பார்த்த தேவர்கள் ஶ்ரீஹரியை
Read 19 tweets
#கொங்கு_சமுதாயம் முன்னேற காரணம் இட ஒதுக்கீடு - #கார்த்திகேய_சிவசேனாபதி.. 😲😲

#கொங்கு_சமுதாயம் முன்னேறியது சுய தொழிலால் என்பது உலகம் தெரியாத #அடி_முட்டாளுக்கு கூடத்தெரியும்..😍😍

#கோவை பல் தொழில்நகரம்..
#திருப்பூர் பின்னலாடை..
#ஈரோடு டெக்டைல்ஸ்..
1/n
#திருச்செங்கோடு ஆழ்துளை வண்டி..
#நாமக்கல் லாரி மற்றும் கோழிப்பண்ணை..
#சேலம் வெள்ளி கொலுசு மற்றும் மோட்டார் தொழில்..
#கரூர் கோச் பில்ட் எனப்படும் வாகன கட்டுமானம் மற்றும் டெக்ஸ்டைல்.
#சென்னிமலை போர்வை..
#பல்லடம் பகுதி தறி..
#பழனி பகுதி ஜேசிபி, டோசர்..

2/n
#கரூரிலிருந்து தாராபுரம் வரை,
#ஒட்டன்சத்திரத்திலிருந்து முத்தூர் வரை நிதி நிறுவனம்..
ஒவ்வொரு 10-15 கிலோ மீட்டருக்கும் ஒரு #ஸ்பின்னிங் மில் என பல வகையான தொழில்களால் சுய முன்னேற்றமடைந்த சமுதாயம் கொங்கு சமுதாயம் ...💪💪
எத்தனை பேர் ஊர் #உறவுகளை பிரிந்து, சுக துக்கம் மறந்து பல
3/n
Read 4 tweets
மழை வருது என்று, #நாமக்கல் தங்கம் மருத்துவமனை சுவருக்கு பக்கம் நின்ற மருத்துவர் கலா, சுவர் இடிந்து விழுந்ததில் மரணம் என்ற செய்தியை பார்த்தவர்களுக்கு அம்மருத்துவர் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சேவையில் உச்சம் தொட்ட எளிய மருத்துவர் கலா👇👇 #Thread #DrKala #Namakkal
டாக்டர் கலாவும் அவரது காதல் கணவர் டாக்டர் செல்வகுமாரும் 1998 ஆம் ஆண்டு முதல் #HIV -யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை & பிற மருத்துவ சேவைகளை அளித்துவந்தனர்.
மகோன்னத சேவைை இது👇
டாக்டர் கலா இதுவரை எச்ஐவி பாதிக்கப்பட்ட 500 மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிசேரியன் செய்து, தாயையும், சேயையும் ஆரோக்கியமாக வாழ வைத்துள்ளார்.
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!