Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture
எமது கலாச்சாரம் எமது நம்பிக்கை JAI HIND 🇮🇳🙏
Ganesan Profile picture Saiprasath Profile picture balasubramani Profile picture Sridhar Kidambi Profile picture SRSMurai Profile picture 19 subscribed
May 13, 2023 15 tweets 2 min read
*கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை.*

ஒரு நாள் நான் முடிவு செய்தேன்

இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…

ஆம்,

எனது வேலை,
எனது உறவுகள்,
என் இறையாண்மை
அனைத்தையும் விட்டுவிடுவது
என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். Image அப்போது…

கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”
May 13, 2023 8 tweets 2 min read
#பிரண்டை அல்லது 
#வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. Image முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு.
May 13, 2023 8 tweets 1 min read
#செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா,இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூ மருத்துவ குணங்களை கொண்டதாகும். Image இது கிழக்கு ஆசியாவில் 
தோன்றிய ஒரு தாவரமாகும்.
இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது . இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது
May 13, 2023 6 tweets 1 min read
#திப்பிலி (Piper Longum), எனும் பல பருவத்தாவரம், Long Pepper (அ) Indian Long Pepper என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும். Piperaceae குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் ஒரு பூக்கும் கொடி ஆகும். Image ஒரு மூலிகைத் தாவரமான இது அதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது, பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும்.
May 13, 2023 6 tweets 1 min read
#சித்தரகம் (ஆங்கிலம்: White Leadwort (தாவரவியல் பெயர்: Plumbago zeylanica) 
என்றழைக்கப்படும் இது, தென்னிந்திய 
பிராந்தியத்தை பூர்வீகமாகக் கொண்டது. Image இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களான பீகார், 
மேற்கு வங்காளம், மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் வளர்க்கப்படும் மருத்துவத் தாவரமாகும்.
May 13, 2023 10 tweets 2 min read
#கீழாநெல்லி (Phyllanthus niruri) ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுதும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். Image இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என பெயரிட்டு அழைத்தனர்.
May 13, 2023 17 tweets 2 min read
தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த வெங்கடாசலபதி ஆலயங்கள்...

வெங்கடாசலபதி என்றாலே நம் நினைவுக்கு வருவது, திருப்பதி ஏழுமலையான் கோவில்தான்.

1 Image ஆனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெங்கடாசலபதிக்கு,பல்வேறு பெயர்களில் திருக்கோவில்கள் அமைந்துள்ளன.அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

2
May 12, 2023 19 tweets 3 min read
*#ஓம்... தொப்புள்... இரண்டிற்குமான தொடர்பு....

கருப்பையில் இருக்கும் குழந்தை "ஓம்" வடிவில்தான் உள்ளது என்பதே "ஓம்" மந்திர சொல்லுக்கும், மனித வாழ்விற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை உணர்த்தும்.. .. Image மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது.
மனித வடிவமும் அருள் வடிவம்தான்....
May 12, 2023 11 tweets 2 min read
#வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும்.
வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், தேனி மாவட்டத்தில் சின்னமனூர்,கூடலூர் காவேரிக்கரையில் நாமக்கல் மாவட்டத்தில் பாண்டமங்கலம் Image வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது. மதுரை அருகே சோழவந்தானில் பயிரிடப்படும் வெற்றிலைகளுக்கு நல்ல வரவேற்பு உண்டு.
May 12, 2023 13 tweets 2 min read
#கடம்பு என்பது (Neolamarckia cadamba மற்றும் Anthocephalus indicus, Anthocephalus Cadamba) தென் ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு மாறாப் பசுமையான, வெப்பமண்டலத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். Image இது அடர்த்தியான கோள வடிவ கொத்துகளான, நறுமணமுள்ள, செம்மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டுள்ளது. பூக்கள் வாசனைத் திரவியங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மரம் ஒரு அலங்கார செடியாகவும், கட்டடத் தேவைகளுக்கான மரம் மற்றும் காகித தயாரிப்பிற்காகவும் வளர்க்கப்படுகிறது.
May 12, 2023 16 tweets 2 min read
#பவளமல்லி அல்லது 
#பாரிஜாதம் பவழமல்லியின் அறிவியல் பெயர் Nyctanthes arbor-tristis ஆகும். இதன் மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக சிறப்பிடம் பெறுகின்றது். பவழ (பவள) நிறக் காம்பும் வெண்ணிறமான இதழ்களும் உடைய பூக்களைக் கொண்டது. Image இதற்குத் தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும். இம்மரம் இருக்கும் இடமே நறுமணம் வீசும். இந்த மலரைச் சேடல் என்றும் குறிப்பிடுவர்.
May 12, 2023 8 tweets 2 min read
#தூதுவளை (Solanum trilobatum) என்பது மூலிகையாகப் பயன்படும் கொடியாகும். இது இந்தியாவிலும் சில வெப்பமண்டல நாடுகளிலும் காணப்படுகிறது. Image இந்தக் கொடி மற்றும் இலை போன்ற அனைத்து பகுதிகளிலும் சிறுசிறு வளைந்த முட்களைக் கொண்டிருக்கும். வேலிகள் அல்லது மற்ற செடியினங்களைப் பற்றிக்கொண்டு படர்ந்து ஏறும் தன்மை கொண்டது. இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும்.
May 12, 2023 4 tweets 1 min read
#முசுமுசுக்கை (தாவரவியல் பெயர்: முகியா மேடரசுபட்டானா-Mukia maderaspatana) என்பது கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. Image சுவாசக்குழல், சுவாசப்பையின் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.
May 12, 2023 33 tweets 4 min read
*விவசாயிகளை காத்தருளும் கங்கையம்மன்*

சென்னையை அடுத்த காரப்பாக்கம், பெரிய பெரிய ஐ.டி., நிறுவனங்கள் சூழ்ந்த பகுதியாகும். முன்னொருகாலத்தில், இப்பகுதி விவசாயம் செய்யும் செழிப்பான பகுதி. பல ஊர்களுக்கு அன்னமிட்ட பகுதி. ஏராளமான விவசாயிகள் வாழ்ந்த பகுதி.

1 Image அன்று அவர்களுக்கு அருளவே “கங்கை அம்மன்’’ இங்கு (காரப்பாக்கம்) கோயில் கொண்டாள். அப்போது, 300 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது, 50,000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். எப்படி இங்கு கங்கை அம்மன் தோன்றினாள்?

2
May 11, 2023 17 tweets 2 min read
காஞ்சிப் பெரியவர் கும்பகோணம் காவிரி கரையில் உள்ள ஸ்ரீசங்கரமடத்தில் முகாம் இட்டிருந்த சமயம்.

காவிரிக்கு அக்கரையில் இருந்த ஒரு பக்தர் தினமும் பெரியவரின் பூஜைக்காகப் பூக்கள் கொண்டு வந்து சமர்ப்பிப்பது வழக்கம்.. Image ஆனால் பூ கொடுக்கும் பக்தர், “நாம் கொண்டு வந்து பூக்களைக் கொடுப்பதால் தான் இந்த மடத்தில் பூஜையே நடக்கிறது!” என்று மனதில் எண்ணி கொண்டு அந்தக் கர்வத்தோடு பூ கொடுப்பதைக் கவனித்தார் காஞ்சி பெரியவர்.
May 11, 2023 9 tweets 2 min read
#கண்டங்கத்தரி

கண்டங்கத்தரி என்பது முழுவதும் முட்கள் நிறைந்த பளிச்சென்ற பசுமை நிறமுடைய தரிசு நிலங்களில் வளரும் ஒரு மூலிகைச் செடி ஆகும். இதற்கு பல கிளைகள் உண்டு. அக்கிளைகளிலும் கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு. Image முட்கள் பெரும்பாலும் 1. 3 செ.மீ நீளத்திற்கும் அதிகமாகவே இருக்கும். இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை முழுவதும் மஞ்சள் நிறக் கூர் முட்களுடனும் காணப்படும். பூக்கள் அடர் ஊதா நிறத்தவை; பூவிதழ்கள் சுமார் 2 செ.மீ நீளமிருக்கும்; இது கத்தரி வகைச் செடி ஆகும்.
May 11, 2023 6 tweets 1 min read
#கரிசலாங்கண்ணி
வெண்கரிசலை அல்லது 
கையாந்தகரை (Eclipta prostrata) ஒரு மருத்துவ மூலிகைச் 
செடியாகும். இதில் இருவகை உண்டு. Image மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.

வெள்ளைக் கரிசலாங்கண்ணியை,
அதன் வெள்ளைநிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும்.
May 11, 2023 11 tweets 2 min read
பெண் வடிவ தட்சிணாமூர்த்தி...!!!

சிவனுடன் போட்டி நடனமிட்ட பார்வதி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை காளி கோவிலில் அருள்பாலிக்கிறாள். இங்கு பெண் வடிவ தட்சிணாமூர்த்தி உள்ளார்.

1 Image தலவரலாறு:

சிவ, சக்தி இடையே தங்களில் யார் சக்தி மிக்கவர் என வாதம் ஏற்பட்டது. 

பார்வதிதேவி, 'நானே உயர்ந்தவள்' என வாதிட்டாள். ''சரி...நீயே உயர்ந்தவளாக இரு!'' என்ற சிவன் அவளை உக்கிர (கோபம்) காளியாக மாற்றி விட்டார். 

2
May 9, 2023 11 tweets 2 min read
*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
திருக்கோவில்* வள்ளிமலை,
வேலூர் மாவட்டம்.

வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புப் பெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா பகுதிக்கு அருகே அமைந் துள்ளது.

1 Image இந்த கோயிலின் மூல தெய்வமாக வள்ளி தெய்வானை யுடன் முருகன் காட்சி அளிக்கிறார்.
புராண வரலாறு சமண சமயத்தில் 23-வது தீர்த்தங்கர ராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர். இவர், முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும் சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளார்.

2
May 8, 2023 23 tweets 2 min read
ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு....

மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.

‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,

ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,

பேனாவை
ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார். இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது
அவனுக்குப் பிடிக்கவில்லை.

நேற்று வரை வீட்டில் இருந்ததால்
அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி
இருந்தது.
May 8, 2023 21 tweets 2 min read
#மிளகு

மிளகு (பைப்பர் நிக்ரம் Piper nigrum) என்பது 'பைப்பரேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த , பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். Image இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. 'மிளகு' என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.