Maridhas Profile picture
youtuber / Nationalist 🙏🏻

Nov 23, 2021, 8 tweets

ஜெய் பீம் படத்தில் வரும் காலண்டர் கட்சிகள் சில.

34.15 நிமிடத்தில் இந்த நீதிமன்ற காட்சியில் வரும் காலெண்டர் "Bar Council Of Tamil Nadu And Puducherry" எனத் தெளிவாக உள்ளது. நீதிமன்ற வளாகம் எனவே Bar Council காலெண்டர் வைத்துள்ளனர். சரி. அடுத்து

1.05 நிமிடத்தில் வரும் இந்த காட்சியில் ஒரு மெடிக்கல் (மருந்தகம்) வருகிறது. இதில் woodwards gripe water calendar வருகிறது. மெடிக்கல் என்பதால் woodwards gripe water 1995களில் பிரபலம் என்பதாலும் இந்த காட்சியில் இந்த காலண்டர் வைத்துள்ளனர். இதுவும் சரி! அடுத்து

1.24 நிமிடத்தில் மூத்த வழக்கறிஞர் அலுவலகத்தில் காட்சி வைத்துள்ளனர். அதில் நீதிமன்ற சிம்பல் உடன் கூடிய காலண்டர் வைத்துள்ளனர். படக்குழுவினருக்கு எங்கே எப்படியான காலண்டர் 1995களில் வைத்திருப்பர் என்று திட்டமிடல் இருந்துள்ளது. அடுத்து

1.33 நிமிடத்தில் ஒரு ரைஸ் மில் முதலாளி போனில் பேசும் காட்சி. அதில் பின்புலத்தில் ரைஸ் மில் என்று எழுதப்பட்ட காலண்டர் வைத்துள்ளனர். அடுத்து

1.50நிமிடத்தில் போலிஸ் உயர் அதிகாரி மக்கள் குறை கேட்கும் கூட்டம் ஒரு தொண்டு நிறுவன நிறுவன கட்டிடத்தில் நடத்துகிற காட்சி. அந்த காட்சியில் குமர விகடன் காலண்டர் வைத்துள்ளனர். இது கல்யாண மண்டபங்கள் ஆரம்பித்து சமுதாயக் கூடங்கள் வரை இருக்கக் கூடிய பொதுவான காலண்டர். அடுத்து

2.14நிமிடத்தில் போலிஸ் உயர் அதிகாரிகள் பேசிக் கொள்ளும் காட்சி. அதில் வைக்கப்பட்டுள்ள காலண்டரில் இருக்கும் சின்னம் முக்கியம். அது indian police service சின்னம். ஆக எந்த இடத்தில் என்ன காலண்டர் வைக்க வேண்டும் என்பதைச் சரியாகத் திட்டமிட்டுள்ளனர் ஜெய்பீம் சூர்யா ஞானவேல் குழுவ. அடுத்து

2.04 நிமிடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த காட்சியில் கொடூரமான ஈவு இரக்கம் இல்லாத ஒரு போலிஸ் வீட்டில் உள்ள காலண்டர் வன்னிர் சமூகத்தைப் பிரதிபலிக்கும் அக்னி கலசம். தற்போது அது இந்து கடவுளான லட்சுமி தேவி காலண்டர் மாற்றியுள்ளனர். ஆக சரியான திட்டமிட்டலுடனே வைத்துள்ளனர் காலண்டர்களை.

கதை அற்புதமானது அவசியமானது, ஆதிக்க அதிகார வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தே ஆக வேண்டும்.
ஆனால் அதைப் பேசுவதாகச் சொல்லித் திட்டமிட்டு ஒரு சமூகத்தையே சாதிவெறியர்களாகக் கொடூரமாகக் காட்ட முயல்வதும் நியாயமா?
தெரியாமல் நடந்துவிட்டது என்பது வடிகட்டிய பொய்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling