அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.
Shrivathsa. B Profile picture KN Ramesh Profile picture sundaram ramaswamy Profile picture BALASUBRAMANIAN.K. Profile picture Subbu Profile picture 23 subscribed
May 4 13 tweets 3 min read
பஞ்ச பாத்திரம்
பஞ்ச பாத்திரத்தை பற்றி 3 விதமான விவரங்கள் உண்டு. முதலில் ஆராதனத்திற்க்கு பயன்படும் அந்த பஞ்ச பாத்திரம் இயற் பெயர்
பஞ்ச பத்ர பாத்திரம் என்பர் பெரியோர். அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை
பத்திரங்களை (இலைகள்) அதிலுள்ள நீரில் இட்டு அந்நீரை உத்தரணி என்ற சிறு கரண்டியால்Image எடுத்து ஆராதனைகளுக்கு பயன் படுத்துவதால் அப்பெயர்.
பஞ்ச பத்ரம்
அது, துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் என்பர். இந்த பத்திரங்களும் தீர்த்தமும் விடப்படும்
பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம். இதுவே காலப் போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது. இந்த
May 3 11 tweets 3 min read
முருகன் கோவில்களில் உள்ள சில சிறப்புகள்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோவிலில் கொடிமரத்தில் இருந்து வலமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ஓம் என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்துள்ளதைக் காணலாம். இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்து தருவர்.Image இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் 12 நரம்புகள் இலையில் இருப்பதை உணரலாம். இவை முருகனின் 12 திருக் கரங்களைக் குறிக்கின்றன. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கென்று தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு Image
May 2 12 tweets 2 min read
#கம்யூனிஸ்டுகளும்_வானமாமலை_30ஆவது_பட்ட_கலியன்_ஸ்வாமியும்

வானமாமலை கலியன் ஸ்வாமி மிகுந்த புலமை உள்ளவர். தமிழ் ஹிந்தி ஆங்கிலம் தெலுங்கு ஆகிய மொழிகளை பேசவும் எழுதவும் படிக்கவும் தெரியும். நவோதயா பள்ளியில் பலவற்றில் பணியாற்றி அதன் தலைமை பீடத்திலும் அமர்ந்தவர். திருக்குறளை ஹிந்தியில் Image மொழி பெயர்த்தவர். அவர்களை ஶ்ரீவைணவ உலகில் இந்திய அளவில் அனைவருக்கும் தெரியும். ஜீயரின் 75வது சம்வஸ்த்ர வைபவம் நடந்த போது அவரை கம்யூனிச சித்தாந்தத்தை கொண்ட பத்திரிகை நிருபர் பேட்டி எடுத்தார். இந்து மதத்தை சிறுமைப்படுத்தியும் கிறிஸ்தவ முஸ்லிம் மார்க்கங்களை உயர்த்தியும் தாங்கிப்
May 1 23 tweets 5 min read
#அருள்மிகு_கோரக்கநாதர்_ஆலயம்
திருநெல்வேலி மாவட்டம்
ஆழ்வார் குறிச்சியின் அத்ரி மலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து சுமார் 6 கிமீ உயரத்தில் உள்ளது. மும்மூர்த்திகள் தங்கியிருந்த அத்ரி அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் கோவில். உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில்Image ஒருவர் அத்ரி மகரிஷி சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர். தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை Image
Apr 30 14 tweets 2 min read
#நாலாயிரம்_பிள்ளையார்_கோவில் நாங்கூர் சீர்காழி அருகில்.

இந்த விநாயகப் பெருமான் அமைதியான சூழலில் ஒரு குளத்தின் அருகில் கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார். சதுர் ஸஹஸ்ர கணபதி என்று வட மொழியில் வழங்கப்படும் இப்பிள்ளையாருக்கு இப்பெயர் வந்த காரணம் சுவாரஸ்யமானது. இராமாயண காலத்தில் Image நடைபெற்ற சம்பவத்தைக் கொண்டு இப்பெயர் காரணப் பெயர் ஆயிற்று.
இவரே க்ஷேத்ர கணபதி. கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வாலிக்கு யாரிடம் போரிட்டாலும் எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வர வேண்டும் என்ற வரத்தைப் பிரமதேவனிடம் பெற்றான். பிரமனை நோக்கிக் கடுமையான தவம் செய்ய ஒரு குகைக்குள் இருந்தான். Image
Apr 30 10 tweets 2 min read
#துர்க்கையின்_நவ_வடிவங்கள்
வன துர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வாலா துர்கா, லவண துர்கா, தீப துர்கா, ஆசுரி துர்கா என்று 9 வகையான வடிவங்களை கொண்டுள்ளாள் துர்கை Image #வன_துர்கா
பண்டைத் தமிழ் இலக்கியங்களால் #கொற்றவை என்ற பெயரால் குறிப்பிடப்பட்டவள். அகத்திய முனிவர் வனதுர்க்கையை வழிபட்டார். ராவணனை வதைத்திடும் வல்லமையைப் பெறுவதற்காக அகத்தியரின் ஆலோசனைப்படி ராமபிரான் இந்த துர்க்கையை வழிபட்டார். வனதுர்கை வழிபாடு ஆந்திரப் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தம். மகாவித்யா என்று லலிதா சகஸ்ரநாமம் பராசக்தியை துதிக்கும். தன்னை வழிபடுபவர்களை சம்சாரமாகிய கட்டிலிருந்து காப்பாற்றுபவள் வனதுர்கா என்பது பக்தர்களின் நம்பிக்கை. தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் கதிராமங்கலம், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தருமபுரத்தில் வனதுர்க்கை கோயில்கள் காணப் படுகின்றன.
Apr 29 17 tweets 4 min read
#திருவிசைநல்லூர்_சிவயோகிநாதர்_கோவில்
8 ஸ்தல விருட்ச மரங்களை கொண்ட அதிசய சிவாலயம்
கும்பகோணம் அருகில் உள்ளது திருவிசைநல்லூர் சிவயோகநாதர் திருக்கோவில்
ஸ்தல விருட்சங்கள்
வன்னி, உந்து வில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, பரசு வில்வம் என இங்கு 8 ஸ்தல விருட்சங்கள் இருக்கின்றன.Image இன்னும் சில அதிசயங்கள்: எல்லா சிவத்தலங்களிலும் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம் முதலிலும் பின்னர் பலிபீடம், நந்தி என்று இருக்கும். ஆனால் இந்த ஆலயத்திற்குள் நுழையும் போது, நந்திதான் முதலில் உள்ளது. இறைவன் 7 முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் கருவறையில் இருக்கும் சிவலிங்கத் திருமேனிImage
Apr 29 8 tweets 2 min read
#திருவெண்காடர்
காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்து வந்தவர் சிவநேசர். பேருக்கேற்றாற்போல சிவனார் மீது அளப்பரிய பக்தி கொண்டிருந்தார். மனைவி ஞானகலா அம்மையார். ஆணொன்றும் பெண்ணொன்றுமாக குழந்தை வேண்டும் என்பதுதான் இவர்களின் விருப்பம். பெண் குழந்தை பிறந்தது. அடுத்து ஆண் குழந்தைக்காக இறைவனை Image வேண்டினார்கள். சிவனின் சித்தமாகவும் அது இருக்க, ஆண் குழந்தை பிறந்தது. மகிழ்ந்த பெற்றோர், குழந்தைக்கு திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். திருவெண்காடனுக்கு 5 வயதிருக்கும் போது தந்தை காலமானார். தாயாரின் அரவணைப்பிலும் அன்பிலும் நல்ல குணமும் பக்தியும் கொண்டு வளர்ந்தார். நாளாக
Apr 28 25 tweets 4 min read
#ஸ்ரீமத்ராமாயணம்
சீதையை பூமாதேவி பூமியை பிளந்து அழைத்து சென்றதுடன் ராமாயணம் முடிந்தது என்பதே நம் எண்ணம். ஆனால் அதற்கு பிறகு நடந்த நிகழ்வுகளை தெரிந்து கொள்வோம். மிதிலை ராஜசபையில் அரியாசனத்தில் ஒரு நாள் ஜனகர் மகாராணி சுனயனாவுடன் அமர்ந்து இருந்தபோது . அயோத்தியிலிருந்து தூதுவன் ஒரு Image செய்தி கொண்டு வந்தான். ஓலையை பிரித்து செய்தியை வாசித்த ஜனகர் ஏதொன்றும் பேசாமல் அந்த ஓலையை அப்படியே தன மனைவியிடம் கொடுத்தார். அவர் ராஜரிஷி! அவர் முகத்தில் அந்த செய்தி எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் ஓலையை வாங்கி வாங்கி வாசித்த, சுனயனா தேவியின் விழிகளிலிருது, சரசரவென
Apr 27 13 tweets 2 min read
#சிவலிங்கம்_சாட்சி_சொன்ன_புராணம்
அந்தக் காலத்தில் காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் அரதன குப்தன் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மதுரையிலேயே வாழ்ந்து வந்தான். காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த அவன் தங்கைக்கும் தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் Image ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை. எதிர்பாராமல் ஒரு நாள் அரதன குப்தனின் தங்கையும் அவள் கணவரும் இறந்து விட்டதாக காவிரிபூம் பட்டினத்தில் இருந்து தகவல் வர, உடனே புறப்பட்ட அரதன குப்தன் காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு
Apr 27 12 tweets 2 min read
#சப்த_காசி_ஸ்தலம் என்று அழைக்கப்படும் மயிலாடுதுறை, காசிக்கு மகிமை கூட உள்ள தலம். காசியில் ஒரு விஸ்வநாதர் விசாலாட்சி. இங்கோ 7 விஸ்வநாதர் விசாலாட்சி.
1) துலா கட்டத்திற்கு (லாகடம்) தெற்கே கிழக்கே பார்த்து கடைத் தெரு விஸ்வநாதர்
2) காவிரிப் பாலதத்திற்கு தெற்கே பாலக்கரை
விஸ்வநாதர் Image 3) வட கரையில் வள்ளலார் தீர்த்த மண்டபத்திற்கு கிழக்கே வள்ளலார் விஸ்வநாதர்
4) திம்மப்ப நாயக்கர் படித்துறையில் படித்துறை விஸ்வநாதர் வடக்கு வீதிக்கும் பெரிய கோயில் வடக்கு மதிலுக்கும் நடுவே உள்ள விஸ்வநாதர்
இந்த ஐவரும் கண்வர், கௌதமர், அகத்தியர், பரத்வாஜர், இந்திரன் ஆகியோர் சிவலிங்கம்
Apr 27 6 tweets 2 min read
#ஸ்ரீமத்ராமாயணம்
ரெங்கநாத பாதுகாவில் படித்தது.
ஸ்ரீமத்குடந்தை ஆண்டவன் தன் ராமாயண காலேக்ஷபத்தில் கூறிய சின்ன உண்மை வ்ருத்தாந்தம்.
வாலி வதத்துக்குப்பின் சுக்ரீவ பட்டாபிக்ஷேகம், அங்கதனுக்கு யுவராஜா பட்டாபிஷேகம் நடக்கிறது. ராம லக்ஷ்மணாளை வானர சேனை அனைத்தும் சேவிச்சதாம். எப்படிImage அந்தக் காட்சி இருக்கும்னு ஆண்டவன் நினைத்துப் பார்க்கிறார். 'அத்தனையும் வாலைத் தூக்கிண்டு பெருமாளை சேவிக்கும் போது’ன்னு சொல்லிக் கொண்டு தன் அனுபவம் ஒன்றை பதிவிடுகிறார். அவருடைய ஸ்நேகிதர் ஒருத்தர் அயோத்திக்குச் சென்று ஸரயுவுக்கு அந்தண்டை காட்டிலே போய் நித்யம் ராமாயணம் வாசிச்சாராம்
Apr 26 8 tweets 2 min read
#ராமநாமம்
பகவானை அடைய மிக எளிதான வழியாக பெரியோர்கள் நாம ஜபத்தை வகுத்துள்ளனர். அதிலும், மிகவும் முக்கியமானது தாரக மந்திரம் – ராம நாமம். சிவ பெருமான் ராம நாமத்தை லோகத்துக்கு விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சாரமாக உபதேசித்து உள்ளார். தாரக மந்திரத்தின் பெருமையை சில நூறு ஆண்டுகளுக்கு முன்புImage அவதரித்த ஸ்ரீபோதேந்திராள் நிலை நாட்டினார். இப்பேற்பட்ட தாரக மந்திரம் ஸ்ரீமத் இராமாயணத்தில் சீதா தேவியையும் ராம பிரானையும் இணைத்து வைத்தது. சுந்தர காண்டத்தில், ஹனுமான் சீதையை தேடி கண்டுபிடிக்கும் பொழுது, தாயார் மிகவும் சோகத்தில் ஆழ்ந்து பிராண ஹத்தி செய்து கொள்ள முயல்கிறார்.Image
Apr 26 9 tweets 3 min read
#வேதபாடசாலைகள்
வேதம் படிக்கும் குழந்தைகளை போற்றுவோம்.
காலையில் பழைய சாதம், அல்லது உப்புமா.
மதியம் சாதாரண ஒரு தொடு கறியுடன் சாப்பாடு. மாலையில் கரைத்து குடிக்க கொஞ்சம் மதிய சாதம். இரவு, மதியம் வடித்த அதே சாதம், அல்லது உப்புமா. காபி, டீ, பால், தோசை, இட்லி எதுவுமே கிடையாது.Image வருடத்தில் சித்திரை மாதம் மட்டும் 15 நாள் லீவு. ஊருக்கு போய் வரலாம். ஆனால் அங்கும் தினமும் எல்லா அனுஷ்டானங்களும் சிரத்தையுடன் செய்யணும். தினமும் சுமார் 2 மணி நேரம் பாடம். பின் 6 மணி நேரம் சந்தை சொல்லணும். மிக மிக கடினமான படிப்பு. கண்டிப்பு மிக அதிகம். நினைத்த உடைகளை உடுத்த Image
Apr 25 12 tweets 3 min read
அகால மரணம் ஏற்படாமல் இருக்க:
சில கோவிலுக்கு சென்று வழிபட்டால், அங்கு ரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமான தெய்வங்கள், 'நமக்கு அகால மரணம் ஏற்படாமல் இருக்க' அனுக்கிரஹம் செய்வார்கள், என்று பலனாக சொல்லப்படுகிறது. திருவெள்ளக்குளம் என்றும் அண்ணன் பெருமாள் கோவில் என்றுImage அழைக்கப்படும் திவ்ய தேசத்துக்கு சென்று (சீர்காழி அருகில் உள்ளது), அங்கு உள்ள 'ஸ்ரீநிவாச பெருமாளை பக்தியுடன் வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், அகால மரணம் ஏற்படாது என்று பலன் சொல்லப் படுகிறது. வெகு தொலைவில் இருப்பவர்களால், வயதானவர்களால், இது போன்ற பிரத்யேகமான கோவிலுக்குச்
Apr 25 21 tweets 6 min read
Ahobilam Nava Narasimhar Temples Ahobilam
1.Krodakara (Varaha) Narasimha Swamy
Kroda means the extruded teeth, Varaha Narasimha swamy in Ahobilam indicates His previous incarnation. He is holding mother earth on His teeth. Both Varaha Swamy carrying Bhoomadevi and NarasimharImage
Image
with Lakshmi Devi on His lap are here. Temple is about 1 km from Upper Ahobilam main temple. Nearby there is a cave temple for Shree Ramanujar where he wrote Shree Bashyam with Narasimhar blessing
Vaaraha Narasimhar Ahobilam - Urchava Moorthy Thirumangai Azwar Pasuram Periya
Apr 24 7 tweets 2 min read
#23கருடசேவை_ஒரே_இடத்தில் கருட சேவை என்பது பெருமாள் கோயில்களில் விசேஷமான வைபவம். அந்த கருட சேவையை ஒரே சமயத்தில் பல திருத்தல மூர்த்திகளை தரிசிக்கும் பாக்கியம் தஞ்சைவாசிகளுக்கு உண்டு. தஞ்சையை அடுத்த வெண்ணாற்றங்கரையில் வைகாசி திருவோண நாளில் 23 பெருமாள்கள் ஒரு சேர காட்சி கொடுப்பது Image விசேஷம். வாழ்வில் ஒருமுறையேனும் கருட சேவையைத் தரிசித்தால், பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெருகும். தஞ்சையில் அரக்கர்களின் அட்டூழியத்தால் கலங்கிப் போன மக்களுக்காக, திருமாலை நினைத்து #பராசரமுனிவர் தவம் இருந்தார்.
அவருக்கு காட்சி தந்த நாராயணர், அரக்கர்களை அழித்தார். தஞ்சகாரனை அழித்த
Apr 24 9 tweets 2 min read
12th may 2024 panjami Sri Adi Shankara 2532 jayanthi Mahotsavam
18th may 2024 ekadasi Sri Adisankara Aaradanai
ஒரு நாள் சங்கரரும் அவரது சீடர்களும் கங்கையில் நீராடி விட்டு, விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது 4 நாய்களுடன் எதிர் திசையில் வந்து கொண்டு இருந்தImage ஒருவன், அவர்களை நெருங்கினான். அவன் எங்கே தங்களை தொட்டு, தங்களது ஆசாரத்தை கெடுத்து விடுவானோ என்று பயந்த சீடர்கள் அவனை "விலகிப் போ" என்றனர். இதைக் கேட்ட அவன், விலகிப் போகிறேன் ஆனால் நீங்கள் விலகிப் போக சொன்னது என்னுள் வியாபித்து இருக்கும் எனது ஆத்மாவையா? அல்லது ரத்தத்தாலும்,
Apr 24 17 tweets 3 min read
#போரூர்_சிதம்பர_ஸ்வாமிகள்
இவர் ஒரு தவ முனிவர். வெறும் பனங்காடாக இருந்த திருப்போரூரில் அருள்மிகு கந்தசுவாமி கோவிலையும், அருகில் உள்ள ஒரு ஓடையை ஒரு பெரிய திருக் குளமாகவும் உருவாக்கியவர் சிதம்பர சுவாமிகள். அது மட்டுமல்ல. சாலையின் மறு புறமுள்ள பிரணவ மலை என்றும் சிவன் மலை என்றும் Image அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அருள்மிகு கைலாசநாதர் பாலாம்பிகை கோவிலை வடிவமைத்தும் இவர் தான். அந்த கோவிலின் பிரகாரத்தில் பாதாளத்தில் சுரங்க பாதை அமைத்து அதில் சமாதி அடைந்ததாக சொல்லப்படுகிறது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் முதல் ஆதீனமாக விளங்கியவர் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் Image
Apr 23 9 tweets 2 min read
நந்தி மூலவராக அருள்பாலிக்கும் கோவில்
பசவனகுடி கர்நாடகா
பொதுவாக மூலவராக இருக்கும் ஈசனின் கருவறைக்கு வெளியே தான் நந்தி வீற்றிருந்து அருள்பாலிப்பார். ஆனால் பெங்களூரு பசவன்குடியில் நந்தியே மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இந்த நந்தி கோவில் ஒரு குன்றின் மீது அமைந்துImage இருக்கிறது. இந்தக் குன்றுக்கு ஊதுகுழல் குன்று என்ற பெயர். இங்கு பித்தளையால் செய்யப்பட்ட எக்காளம் போன்ற ஊது குழல் இருக்கிறது. படைப்பிரிவின் அடையாள ஒலியாக அது ஒலிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அந்த குன்றுக்கு இப்பெயர் வந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள். பெங்களூருவில் உள்ளImage
Apr 22 19 tweets 4 min read
#சாச்திரப்பாக்கம்_வைத்தீஸ்வரன்_கோவில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது சாஸ்திரம்பாக்கம். இங்கு சிவபெருமான் வைத்தீஸ்வரன் என்ற திருநாமத்துடன். அம்பாளின் திருநாமம் தையல்நாயகி என்ற திருநாமத்துடன் Image அருள்பாலித்து வருகின்றார்கள். பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் காலப் போக்கில் சிதிலமடைந்து, மண் மூடி போய் விட்டது. முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து பாம்புகள் நடமாடும் இடமாக மாறிப் போனது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வாழ்ந்த மனநோய் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர், இறைவனின் சக்தியால் Image